Some Populer Post

  • Home  
  • கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை!
- Sri Lanka

கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை!

பல வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிடத்தக்க அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ​ இதற்கிடையில், வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞை அமைப்புகளில் (signals failure) ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ​ அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, […]

பல வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிடத்தக்க அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ​

இதற்கிடையில், வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞை அமைப்புகளில் (signals failure) ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ​

அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.