Some Populer Post

  • Home  
  • நாமலின் செயலாளர் வீட்டில் சோதனை!
- Sri Lanka

நாமலின் செயலாளர் வீட்டில் சோதனை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரின் கல்கிஸையிலுள்ள வீட்டில், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று அதிகாலை வேளையில் விசேட சோதனையொன்றை மேற்கொண்டு அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் (Safe) ஒன்றை மீட்டெடுத்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கல்கிஸ்ஸ, டெம்ப்ளர்ஸ் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளர் சஞ்சய சமரசிங்க என்பவர் என இலஞ்ச […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரின் கல்கிஸையிலுள்ள வீட்டில், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று அதிகாலை வேளையில் விசேட சோதனையொன்றை மேற்கொண்டு அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் (Safe) ஒன்றை மீட்டெடுத்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கல்கிஸ்ஸ, டெம்ப்ளர்ஸ் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் சஞ்சய சமரசிங்க என்பவர் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றி வருகிறார்.

ஆணைக்குழுவிடம் உள்ள கோப்பொன்று தொடர்பான விசாரணைகளின் அங்கமாகவே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸாரின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள், சுமார் 4 மணிநேரம் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னரே வீட்டிலிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இருப்பினும், குறித்த பாதுகாப்பு பெட்டகத்தை திறப்பதற்கான கடவுச்சொல் தன்னிடம் இல்லை என வீட்டின் உரிமையாளரான சஞ்சய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.