Some Populer Post

  • Home  
  • புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்
- Sri Lanka

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபயசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது மாகாணசபைதேர்தல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் அதன் பின்னர் இது குறித்து தீர்மானிப்போம். நாங்கள் வழங்கிய இதுவரை நிறைவேற்றப்படாமலுள்ள முக்கிய வாக்குறுதிகள் புதிய அரசியலமைப்பும் மாகாணசபை தேர்தலும், ஏனைய வாக்குறுதிகளை நாங்கள் தற்போது நிறைவேற்றி வருகின்றோம்.ஆகவே புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜனவரியில் […]

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மாகாணசபைதேர்தல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் அதன் பின்னர் இது குறித்து தீர்மானிப்போம்.

நாங்கள் வழங்கிய இதுவரை நிறைவேற்றப்படாமலுள்ள முக்கிய வாக்குறுதிகள் புதிய அரசியலமைப்பும் மாகாணசபை தேர்தலும்,
ஏனைய வாக்குறுதிகளை நாங்கள் தற்போது நிறைவேற்றி வருகின்றோம்.ஆகவே புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜனவரியில் ஆரம்பமாகும்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.