Some Populer Post

  • Home  
  • அனோஜன் மரண தண்டனைச் சிறைக்கு மாற்றப்பட்டார்!  
- Breaking News - Sri Lanka

அனோஜன் மரண தண்டனைச் சிறைக்கு மாற்றப்பட்டார்!  

சவுதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் தற்போது மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டுப் பலத்த காவலுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இன்னும் மூன்று வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனிடம் சவூதி அரேபிய அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளின் கைகளையும் கால்களையும் கனமான இரும்புச் சங்கிலியால் பிணைத்தே சவுதி சிறையில், இருட்டறைகளில் வைத்திருப்பார்கள். அவர்கள் வெளியுலகத்தோடு […]

சவுதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் தற்போது மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டுப் பலத்த காவலுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இன்னும் மூன்று வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனிடம் சவூதி அரேபிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளின் கைகளையும் கால்களையும் கனமான இரும்புச் சங்கிலியால் பிணைத்தே சவுதி சிறையில், இருட்டறைகளில் வைத்திருப்பார்கள். அவர்கள் வெளியுலகத்தோடு தொடர்பில் இருப்பதும் மறுக்கப்படும்.

இந்த வகையில் அனோஜனின் தற்போதைய நிலைமை மிகவும் கடினமானது என்றே தெரிய வருகின்றது.

இதற்கேற்ப, அனோஜனின் தம்பியாகிய ஹம்சிதன் என்பவரும், ”இரண்டு நாட்களாக அண்ணன் தொலைபேசி எடுக்கவில்லை. முந்தைய நாள் இரவு அவரை அழைத்துச் சென்றுள்ளார்கள். அவர் நேற்று முன்தினம்தான் அழைத்தார். மரண தண்டனை கொடுக்கப்படும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்களாம். இந்தச் சிறைச்சாலையில் தொலைபேசி வசதிகள் இல்லையாம். அதனால், தொலைபேசியூடாகக் கதைக்க முடியாது என்றும், எல்லோருக்கும் இந்த விஷயத்தை கூறுமாறும் சொன்னார். அரசு செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யுமாறு சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்” என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.