Some Populer Post

  • Home  
  • “அவன் செய்தது தவறுதான்… மன்னித்து விடுங்கள்” – மகனுக்காக கண்ணீர் சிந்தும் தாய்!
- Sri Lanka

“அவன் செய்தது தவறுதான்… மன்னித்து விடுங்கள்” – மகனுக்காக கண்ணீர் சிந்தும் தாய்!

சவூதியில் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்து, தாயகம் அழைத்து வர உதவுமாறு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டுக்கான தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அனோஜனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. […]

சவூதியில் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்து, தாயகம் அழைத்து வர உதவுமாறு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டுக்கான தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனோஜனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தனது மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து, அவரை விடுவித்து, நாட்டுக்கு அழைத்து வர ஒத்துழைக்குமாறு அனோஜனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.