Some Populer Post

  • Home  
  • சிறைச்சாலை விதிமுறைகளின்படி சிறை ஆடை கட்டாயம்!
- Sri Lanka

சிறைச்சாலை விதிமுறைகளின்படி சிறை ஆடை கட்டாயம்!

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு கருத்துக்களுக்குத் தெளிவுபடுத்தல் வழங்கி அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிகமாக விளக்கமளித்த அவர், பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், […]

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு கருத்துக்களுக்குத் தெளிவுபடுத்தல் வழங்கி அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிகமாக விளக்கமளித்த அவர், பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அந்த் தண்டனைக் காலத்தைச் சிறைச்சாலையில் கழிக்கும் போது அவர் தமது காவி ஆடையை அணிய முடியும் எனத் தெரிவித்தார்.

எனினும், விதிக்கப்பட்டது கடுழியச் சிறைத்தண்டனை என்றால் எந்தவொரு நபரும் சிறை ஆடையையே அணிய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தண்டனை பெற்ற ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவரது சிறைத்தண்டனைக் காலம் 3 ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தால், அவர் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடையை அணிவதற்குச் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுமதி வழங்க முடியும்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளுக்கும் காவி ஆடை அணிய அனுமதி வழங்கப்படலாம்.

ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு தராதரத்தைக் கொண்ட நபராக இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது சிறைச்சாலையினால் வழங்கப்படும் ஆடையை அணிந்தே ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டின் சிறைச்சாலைகளில் 63 க்கும் மேற்பட்ட தேரர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் சிறைச்சாலையினுள் சிறை ஆடையையே அணிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.