Some Populer Post

  • Home  
  • கனடாவில் மட்டு.புனித மைக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் மர நடுகை!
- Canada

கனடாவில் மட்டு.புனித மைக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் மர நடுகை!

கனடாவில் வசிக்கும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மர நடுகைச் செயற்பாடு ஒன்றை இன்றைய தினம் கனேடிய நேரம் காலை 10 மணிக்கு மிசிசாகா புறோக்மிட் பார்க்கில் நடாத்தியிருந்தது. ‘ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்’ என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட மேற்படி மர நடுகை நிகழ்வில் மழைக்கு மத்தியிலும் பல தரப்பட்ட வயதினைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. மட்டு.புனித மைக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சார்பில் நிகழ்வில் சமூகமளித்தவர்களுக்கு […]

கனடாவில் வசிக்கும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மர நடுகைச் செயற்பாடு ஒன்றை இன்றைய தினம் கனேடிய நேரம் காலை 10 மணிக்கு மிசிசாகா புறோக்மிட் பார்க்கில் நடாத்தியிருந்தது. ‘ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்’ என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட மேற்படி மர நடுகை நிகழ்வில் மழைக்கு மத்தியிலும் பல தரப்பட்ட வயதினைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டு.புனித மைக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சார்பில் நிகழ்வில் சமூகமளித்தவர்களுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கப்பட்ட அதே வேளை மரநடுகையின் முக்கியத்துவம் குறித்தும் அறிவிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி நிழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரங்களை நடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.