Some Populer Post

  • Home  
  • 235,000 டொலர் பெறுமதியான திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு: OPP
- Canada

235,000 டொலர் பெறுமதியான திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு: OPP

கலிடன் (Caledon) பகுதியில் சுமார் 235,000 டொலர் மொத்த பெறுமதி கொண்ட நான்கு திருடப்பட்ட வாகனங்களை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் ஆல்டன் (Alton) பகுதியில் உள்ள ஒரு காணியில் திருடப்பட்ட வாகனம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கலிடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அன்றைய தினம் இரவு, அந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, திருடப்பட்ட நான்கு வாகனங்களுடன் அவற்றின் சாவிகள், போலியான வாகன அடையாள எண்கள் (VIN numbers), […]

கலிடன் (Caledon) பகுதியில் சுமார் 235,000 டொலர் மொத்த பெறுமதி கொண்ட நான்கு திருடப்பட்ட வாகனங்களை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த வாரம் ஆல்டன் (Alton) பகுதியில் உள்ள ஒரு காணியில் திருடப்பட்ட வாகனம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கலிடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அன்றைய தினம் இரவு, அந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, திருடப்பட்ட நான்கு வாகனங்களுடன் அவற்றின் சாவிகள், போலியான வாகன அடையாள எண்கள் (VIN numbers), துப்பாக்கி ரவைகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிக பெறுமதி கொண்ட சொத்துக்கள் திருடப்படுவது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், கலிடன் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.