Some Populer Post

  • Home  
  • நோர்த் பெட்டில்ஃபோர்ட் கொலைச் சம்பவம்: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்
- Canada

நோர்த் பெட்டில்ஃபோர்ட் கொலைச் சம்பவம்: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

நோர்த் பெட்டில்ஃபோர்ட் (North Battleford) பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சஸ்காச்சுவான் (Saskatchewan) ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸாரின் தகவல்படி, 36 வயதுடைய டைசன் மொஸ்கிடோ (Tyson Mosquito) என்பவரது மரணம் தொடர்பாக, 21 வயதுடைய டைசன் கம்மர் (Tyson Cummer) என்பவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை 4 மணியளவில், 105 […]

நோர்த் பெட்டில்ஃபோர்ட் (North Battleford) பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சஸ்காச்சுவான் (Saskatchewan) ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸாரின் தகவல்படி, 36 வயதுடைய டைசன் மொஸ்கிடோ (Tyson Mosquito) என்பவரது மரணம் தொடர்பாக, 21 வயதுடைய டைசன் கம்மர் (Tyson Cummer) என்பவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை 4 மணியளவில், 105 வது வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குப் பின்னால் உள்ள சந்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு விரைந்தனர். காயமடைந்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது டைசன் கம்மரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரைத் தேடி கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவியை விசாரணையாளர்கள் கோரியுள்ளனர்.

சந்தேக நபரின் விபரங்கள்:

  • உயரம்: சுமார் 5 அடி 10 அங்குலம் (178 செ.மீ)

  • எடை: 200 இறாத்தல் (91 கிலோ)

  • அடையாளம்: பழுப்பு நிற கண்கள், கறுப்பு நிற சுருட்டை முடி மற்றும் அவரது வலது கையில் ஒரு பெரிய தழும்பு உள்ளது.

அவரைப் பார்த்தால் பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.