Some Populer Post

  • Home  
  • சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை முத்தமிடுவதை விட காவன்திஸ்ஸ யானையை முத்தமிட்டது மிகவும் பெறுமதியானது- சஜித்
- Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை முத்தமிடுவதை விட காவன்திஸ்ஸ யானையை முத்தமிட்டது மிகவும் பெறுமதியானது- சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவரை முத்தமிடுவதை விட, உயிரிழந்த காவன்திஸ்ஸ என்ற தந்த யானையை முத்தமிட்டது மிகவும் பெறுமதியானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடனான அரசாங்கத்தின் உறவு குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், அரசாங்கம் முத்தமிடவும் கட்டித்தழுவவும் விரும்பும் நிறுவனங்களாக அவற்றை அடையாளப்படுத்தினார். 2025ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் 61.1% […]

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவரை முத்தமிடுவதை விட, உயிரிழந்த காவன்திஸ்ஸ என்ற தந்த யானையை முத்தமிட்டது மிகவும் பெறுமதியானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடனான அரசாங்கத்தின் உறவு குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், அரசாங்கம் முத்தமிடவும் கட்டித்தழுவவும் விரும்பும் நிறுவனங்களாக அவற்றை அடையாளப்படுத்தினார்.

2025ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் 61.1% ஆனோர் நாளொன்றுக்கு 8.30 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்ததாக மதிப்பிட்டுள்ள 2025 உலக வங்கி அறிக்கையை மேற்கோள் காட்டி, நாட்டின் வறுமை மட்டம் குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

தனது உரையின் போது, அப்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய கட்டித்தழுவி வரவேற்கும் புகைப்படம் அடங்கிய ஆவணமொன்றையும் பிரேமதாச சபையில் காண்பித்தார்.

“பிரதமருக்கு எதிராக நான் இதனைக் காண்பிக்கக் கூடாது, ஆனால் நீங்கள் முத்தமிடும் புகைப்படம் இதோ இருக்கிறது. அது பரவாயில்லை; அது ஒருவரை வரவேற்கும் சாதாரண முறைதான்” என அவர் கூறினார்.

காவன்திஸ்ஸ யானையைத் தாம் முத்தமிட்டது குறித்துப் பரவலாகப் பேசப்பட்ட விமர்சனத்திற்குப் பதிலளித்த பிரேமதாச, அந்தச் செயலின் முக்கியத்துவத்தை அரசாங்க உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை முத்தமிடுவதை விட, அந்தத் தந்த யானையை முத்தமிட்டதே மிகவும் பெறுமதியானது என அவர் வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.