Some Populer Post

  • Home  
  • நான்கு நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன
- Sri Lanka

நான்கு நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, விமல் சுரேந்திர, லக்சபான, கெனியன் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் நான்கு அடி மாத்திரமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் ஊடாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையின் […]

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, விமல் சுரேந்திர, லக்சபான, கெனியன் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன.

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் நான்கு அடி மாத்திரமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் ஊடாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.