Some Populer Post

  • Home  
  • யாழில் ‘மெட்ரோ பஸ்’ சேவை
- Sri Lanka

யாழில் ‘மெட்ரோ பஸ்’ சேவை

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையான Metro Bus சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று(10) விசேட கலந்துரையாடலும் வழித்தடங்களுக்கான கள ஆய்வும் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக, இன்று காலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) வட மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள […]

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையான Metro Bus சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று(10) விசேட கலந்துரையாடலும் வழித்தடங்களுக்கான கள ஆய்வும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, இன்று காலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) வட மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள Metro Bus சேவைக்கான வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு ஆராயும் கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, Metro Bus சேவையைப் பரீட்சார்த்த அடிப்படையில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பொருத்தமான வழித்தடங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.