Some Populer Post

  • Home  
  • விகாரமாதேவி சத்தியாகிரகம்: நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கம்மன்பில ரிட் மனு
- Sri Lanka

விகாரமாதேவி சத்தியாகிரகம்: நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கம்மன்பில ரிட் மனு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக நடத்தப்பட்ட சத்தியாகிரகத்திற்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் வகையில் எழுத்தாணையை பிறப்பிக்குமாறு கோரி ரிட் மனு ஒன்றை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக கறுவா தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், கொழும்பு பிரதான நீதவான் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு […]

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக நடத்தப்பட்ட சத்தியாகிரகத்திற்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் வகையில் எழுத்தாணையை பிறப்பிக்குமாறு கோரி ரிட் மனு ஒன்றை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக கறுவா தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், கொழும்பு பிரதான நீதவான் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் குழுவொன்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் சத்தியகிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி கறுவா தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 106 வது பிரிவின் பிரகாரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த சத்தியகிரகப் போராட்டத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய குறித்த உத்தரவு முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய மனுதாரரான உதய கம்மன்பில, மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பம் அல்லது பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அவசர சந்தர்ப்பங்களில் மட்டுமே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பூஜ்ய உலப்பனே சுமங்கல தேரர், பூஜ்ய பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து அது தொடர்பில் விடயங்களை வினவ முடியும் என்ற நிலையில், கொழும்பு பிரதான நீதவான் ஒருபக்க சார்பாக குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.