Some Populer Post

  • Home  
  • தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றம்; Ontario மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி கண்டனம்
- Breaking News - Canada

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றம்; Ontario மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி கண்டனம்

யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, இலங்கை மற்றும் இந்திய அரசுகள் திலீபனின் தியாகத்தைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பது கவலைக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும் எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கனடாவின் ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 1987 ஆம் […]

யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, இலங்கை மற்றும் இந்திய அரசுகள் திலீபனின் தியாகத்தைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பது கவலைக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கனடாவின் ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் ஆயுதங்களை ஒப்படைத்தது. ஆனால் ஈழத்தமிழரின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாமையினால் விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் என்னும் இராசையா பார்த்தீபன் அவற்றைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அஹிம்சை வழியில் போராடத் தீர்மானித்தார்.

1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று திலீபன் இந்திய அரசுக்கு 5 அம்சக் கோரிக்கையொன்றை முன்வைத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் வீதியில் அமைக்கப்பட்ட ஒரு பந்தலில் நீராகாரம் கூட அருந்தாது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் இந்திய அரசோ அல்லது தமிழ்நாட்டு அரசோ திலீபனின் கோரிக்கைகளையும் அவரது தியாக வேள்வியின் உன்னதத்தையும் அறியாமல் அவற்றைப் புறக்கணித்து செயற்பட்டன.

எனவே அஹிம்சை வழியில் போராடிய திலீபன், இறுதியில் தனது உயிரை தமிழ்மக்களுக்காக அர்ப்பணித்தார். ஆனால் இந்தத் தியாகத்தை இலங்கை, இந்திய அரசுகள் தொடர்ந்து புறக்கணிப்பது கண்டனத்துக்குரியதாகும். அதன் நீட்சியாக யாழ்ப்பாணம், நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.