Some Populer Post

  • Home  
  • ஐரோப்பிய வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸ் தேசம் தனது நாட்டு மணவர்களால் அச்சமடைந்துவிட்டது?
- World

ஐரோப்பிய வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸ் தேசம் தனது நாட்டு மணவர்களால் அச்சமடைந்துவிட்டது?

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய தத்துவங்களை உலகுக்கு அளித்த ஐரோப்பிய வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸ் தேசம் இன்று தனது கல்வி அமைப்பின் எதிர்காலத்தைக் காக்க வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறது. சுமார் 3.6 டிரில்லியன் யூரோக்கள் என்ற பிரம்மாண்ட பொதுக்கடன் சுமையின் கீழ் பிரான்ஸ் அரசு தள்ளாடுகிறது. பொருளாதாரத்தை மீட்க அரசு கொண்டுவந்த கடுமையான நிதிச் சிக்கன நடவடிக்கைகள், நாட்டின் கல்வித் துறையை முடக்கி, மாணவர்களை வெகுண்டு எழச் செய்துள்ளன. ஒருபுறம் […]

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய தத்துவங்களை உலகுக்கு அளித்த ஐரோப்பிய வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸ் தேசம் இன்று தனது கல்வி அமைப்பின் எதிர்காலத்தைக் காக்க வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறது.

சுமார் 3.6 டிரில்லியன் யூரோக்கள் என்ற பிரம்மாண்ட பொதுக்கடன் சுமையின் கீழ் பிரான்ஸ் அரசு தள்ளாடுகிறது. பொருளாதாரத்தை மீட்க அரசு கொண்டுவந்த கடுமையான நிதிச் சிக்கன நடவடிக்கைகள், நாட்டின் கல்வித் துறையை முடக்கி, மாணவர்களை வெகுண்டு எழச் செய்துள்ளன.

ஒருபுறம் பொருளாதாரச் சரிவும், வரலாறு காணாத கடன் சுமையும் அரசின் கழுத்தை நெருக்குகின்றன. மறுபுறம் உள்கட்டமைப்புச் சீர்கேடு, ஆசிரியர் பற்றாக்குறை, ஊதியம் வழங்க முடியாத நிலை எனத் திணறும் கல்வித் துறை, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விகுறியாக்கியுள்ளது.

சுவர்களில் விரிசல்கள், பழுதடைந்த வகுப்பறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லாத பாடவேளைகள் என ஏதோ ஓர் ஏழை நாட்டில் இருப்பது போன்ற அவல நிலையில்தான் பிரான்ஸின் பள்ளிகள் இருக்கின்றன.

மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பான கல்விச் சூழலுக்காகவும் வகுப்புகளைப் புறக்கணித்து ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசையே நிலைகுலைய வைத்துள்ளனர்.

செலவினங்களைக் குறைக்க அரசு எடுத்த முடிவுகள் வகுப்பறைகளைப் பாதித்ததால், மாணவர்களோடு ஆசிரியர்களும் அரசுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கதவடைப்பு, பல்கலைக்கழக முற்றுகை, காவல் துறை மோதல் எனப் பிரான்ஸ் நாடு முன்னெப்போதும் கண்டிராத கல்வி நெருக்கடியைச் சந்திக்கிறது.

மாணவர் போராட்டம் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த முதன்மை காரணம், நாட்டின் பொருளாதாரச் சரிவு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை.

பிரான்ஸின் பொதுக்கடன் 3.596 டிரில்லியன் யூரோக்களாக (4.08 டிரில்லியன் அமெரிக்க டாலர்) உயர்ந்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 119% ஆகும். கடனுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 67 முதல் 77 பில்லியன் யூரோக்கள் வரை ஆகிறது. இது அரசு தனது ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியை விட அதிகம்.

தொடர் பட்ஜெட் பற்றாக்குறை: 1974-க்குப் பிறகு பிரான்ஸ் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. வருவாயை விட மக்கள் நலச் செலவுகள் ஆண்டுதோறும் அதிகமாகவே இருந்து வருகின்றன.

பிரான்ஸ் முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு படுமோசமடைந்துள்ளது. பள்ளிகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், காலை 8 மணிக்குச் செல்லும் மாணவர்கள் மாலை 6 மணி வரை பள்ளியிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி நேரத்தில் பெரும் பகுதி நேரத்தைச் சும்மா கழிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாரீஸின் புறநகரில் உள்ள பள்ளிகளில் தொடங்கிய போராட்டம், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் படிப்படியாக அதிகரித்து நாடு முழுவதும் பரவிவிட்டது. இன்று பள்ளி மாணவர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்.

இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் உள்ள 3,700-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

பள்ளிகளில் சுகாதாரமில்லாத கழிப்பறைகள், சில பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லாத நிலைகளில்தான் நிர்வாகம் இயங்குகிறது.

பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், கல்விச் சூழலைச் சீரமைக்க வேண்டும், பள்ளி பாடவேளையை வரையறை செய்ய வேண்டும், கூடுதலான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பவைதான் மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளாகும்.

போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அவசர ஆலோசனை நடத்தி வகுப்புகளை இணையவழியில் நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்தப் போராட்ட மோதல்களில் 85 காவலர்கள் காயமடைந்துள்ளனர்; சில பள்ளிகளுக்குத் தீ வைக்கப்பட்டு டிராம் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். எதிர்க்கட்சியான ‘லா பிரான்ஸ் இன்சோமிஸ்’ இந்தப் போராட்டத்தைத் தூண்டுவதாக அரசு குற்றம் சாட்டுகிறது.

அதேவேளையில், கல்வி அமைச்சகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்களைச் சந்தித்துப் பேசியதுடன், சீர்திருத்தக் கருத்துகளைப் பெற புதிய ஆன்லைன் தளத்தையும் அமைத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் தாக்கம் அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவி, அங்குள்ள லியேஜ் நகரிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.