Some Populer Post

  • Home  
  • தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்: மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம்!
- Breaking News - Canada

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்: மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றிய சம்பவத்திற்கு கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாளே, அங்கு அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையை இலங்கை பொலிஸார் அதிகாலை வேளையில் அகற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராம்ப்டன் மேயர் பாட்ரிக் பிரவுன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “நல்லூர் நினைவிடத்தில் தமிழ் மக்கள் […]

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றிய சம்பவத்திற்கு கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாளே, அங்கு அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையை இலங்கை பொலிஸார் அதிகாலை வேளையில் அகற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராம்ப்டன் மேயர் பாட்ரிக் பிரவுன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “நல்லூர் நினைவிடத்தில் தமிழ் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய மறுநாளே, அங்கு அமைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றியுள்ளனர். இது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. 1958ஆம் ஆண்டு கலவரங்கள், 1983 கருப்பு ஜூலை படுகொலைகள் மற்றும் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான இனப்படுகொலையை மேற்கொண்டு வந்துள்ளது.

இந்த இனப்படுகொலை இன்று வேறு வடிவங்களில் தொடர்கிறது. தமிழ் மக்களின் வரலாறு, நினைவுகள் மற்றும் அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நினைவிடங்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்படுகின்றன; நினைவேந்தல்கள் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன; அதிகாலை வேளையில் சிலைகள் அகற்றப்படுகின்றன.

ஆனால், வரலாற்றை உங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. தமிழ் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை உலகம் கண்டுள்ளது; உண்மையை உலகம் அறிந்துள்ளது. கடந்த கால அமைதியை சீர்குலைக்கவோ அல்லது வரலாற்றை அழிக்கவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நிலைத்து நிற்கும் உண்மையை மாற்றிவிட முடியாது.

உண்மை ஒருபோதும் புதைக்கப்படக்கூடாது என்பதற்காகவே பிராம்ப்டன் நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தை நாங்கள் பெருமையுடன் நிறுவியுள்ளோம். வரலாற்றை உங்களால் அழிக்க முடியாது. இலங்கை அரசின் தொடர்ச்சியான தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்; எப்போதும் நினைவில் கொள்வோம். கொழும்பில் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் போர்க் குற்றவாளிகளுக்கு நான் கூறுவது ஒன்றுதான்—நீங்கள் செய்த படுகொலைகள், அத்துமீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைக்க வேண்டாம். உலகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.