Some Populer Post

  • Home  
  • நிதி மோசடி வழக்கு: உதய கம்மன்பிலவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
- Sri Lanka

நிதி மோசடி வழக்கு: உதய கம்மன்பிலவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியான உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனச் […]

அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியான உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

இதற்கமையவே அவர் விடுவிக்கப்பட்டதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொழிலதிபரான பிரையன் ஷாடிக் (Brian Shaddick) என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலி அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி புரிந்ததாகக் கூறி, கடந்த அரசாங்கத்தில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.