Some Populer Post

  • Home  
  • ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு
- Sri Lanka

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

கலகோட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் தலைமை ஆய்வாளர் மூலமாக அந்தப் பிடியாணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் திகதி ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பின் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய மேன்முறையீட்டு […]

கலகோட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் தலைமை ஆய்வாளர் மூலமாக அந்தப் பிடியாணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 1 ஆம் திகதி ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பின் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று(29.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பின் பேரில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனை தொடர்பில் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் அண்மையில் சட்டப்படி செல்லாது என தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்தைக் கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்காத நிலையில், அவர் பித்தப்பை அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேவையேற்பட்டால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தயாராக இருப்பதாக ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் ஞானசார தேரருக்கு வசதியான தருணமொன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாக அனுமதி தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை சட்டமா அதிபர் திணைக்களமும் ஏற்றுக் கொண்டது.

அதனையடுத்து ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தகுதியான மருத்துவ நிலையை அடையும் வரை வழக்கை ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.