Some Populer Post

  • Home  
  • ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் வெவ்வேறு சிறை அறைகளில்!
- Sri Lanka

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் வெவ்வேறு சிறை அறைகளில்!

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளும் வெவ்வேறு சிறை அறைகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் அண்மையில் 200 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த 15 கைதிகளின் செயற்பாடுகள் குறித்து சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உட்கொள்வதுடன், ஏனைய கைதிகளுடன் சுமுகமாக உரையாடுவதாகவும் தெரியவந்துள்ளது. விசேட […]

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளும் வெவ்வேறு சிறை அறைகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் அண்மையில் 200 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த 15 கைதிகளின் செயற்பாடுகள் குறித்து சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உட்கொள்வதுடன், ஏனைய கைதிகளுடன் சுமுகமாக உரையாடுவதாகவும் தெரியவந்துள்ளது.

விசேட கண்காணிப்பு
எனினும், இவர்களின் நடவடிக்கைகளில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் விசேட கண்காணிப்பை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை, இந்த 15 பேருக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் பெறப்படும் ஆலோசனைகளுக்கு அமைய, சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு சில மாதங்கள் ஆகலாம் எனவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.