Some Populer Post

  • Home  
  • மக்களுக்குச் திறம்பட சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு
- Sri Lanka

மக்களுக்குச் திறம்பட சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்குச் திறம்பட சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்பொழுது இலங்கையில் மக்களுக்கு சுமையாக இல்லாத, வலுவான வலுசக்திச் சந்தையொன்று கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஜெட் A-1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை பெட்ரோலியக் சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) […]

வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்குச் திறம்பட சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தற்பொழுது இலங்கையில் மக்களுக்கு சுமையாக இல்லாத, வலுவான வலுசக்திச் சந்தையொன்று கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஜெட் A-1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை பெட்ரோலியக் சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) ஆகியவற்றிற்குரிய புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை இன்று (2) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்கால தேவைக்கான கொள்ளளவை அதிகரித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு முத்துராஜவெலவுக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையே 21 கிலோமீற்றர் நீளமான விசேட நிலத்தடி குழாய் கட்டமைப்பும் தாங்கித் தொகுதியும் நிர்மாணிக்கப்படுகின்றன.

30 மாதங்களில் நிறைவடையும் இந்தத் திட்டத்தின்கீழ், 92,000 கனமீற்றர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், பெட்ரோலியக் சேமிப்பு முனைய நிறுவனத்தால் முத்துராஜவெல முனையத்தில் 40,000 கன மீற்றர் மேலதிக சேமிப்புக் கொள்ளளவு கொண்ட 3 புதிய தாங்கிகளை அமைக்கும் பணிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன. 18 மாத ஒப்பந்தக் காலத்தைக் கொண்ட இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளது.

சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்திகள், நாட்டின் எரிபொருள் கையிருப்புகளை வலுப்படுத்தவும், அதிகரித்து வரும் வலுசக்தி தேவைகளைத் தடையின்றிப் பூர்த்தி செய்யவும் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.