Some Populer Post

  • Home  
  • பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் பூசிய நண்பனுக்கு வந்த கதி!
- India

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் பூசிய நண்பனுக்கு வந்த கதி!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில், நண்பனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர், ஜானுபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நீரஜ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் அவரது சகோதரர் மற்றும் நண்பர்களான பலர் கலந்துகொண்டனர். கொண்டாட்டத்தின் போது நீரஜ் கேக் வெட்டியதும், அவரது நண்பரொருவர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற […]

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில், நண்பனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், ஜானுபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நீரஜ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் அவரது சகோதரர் மற்றும் நண்பர்களான பலர் கலந்துகொண்டனர்.
கொண்டாட்டத்தின் போது நீரஜ் கேக் வெட்டியதும், அவரது நண்பரொருவர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மற்ற நண்பர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோதிலும், ஆத்திரமடைந்த நீரஜ் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் அந்த நபரை தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜெயின்பூர் காவல்துறையினர், நீரஜ் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.