Some Populer Post

  • Home  
  • பாடசாலை மாணவி வன்புணர்வு: பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறை
- Sri Lanka

பாடசாலை மாணவி வன்புணர்வு: பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறை

பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் Sub-Inspector of Police ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியுமான லால் ரணசிங்க பண்டார, பிரதிவாதிக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து […]

பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் Sub-Inspector of Police ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியுமான லால் ரணசிங்க பண்டார, பிரதிவாதிக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து இத்தண்டனையை விதித்துள்ளார்.

குறித்த 50 ஆண்டுகாலக் கடூழியச் சிறைத் தண்டனையை 15 ஆண்டுகளில் ஏககாலத்தில் அனுபவிக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட நீதிபதி, குறித்த நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

இதற்கு மேலதிகமாக, நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபாய் வீதம் அபராதம் செலுத்துமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.