Some Populer Post

  • Home  
  • நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்
- World

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக பரிசுக்கு அறிவித்துள்ளது. நவநீதம் பிள்ளை ஒரு தமிழ் வழிதோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசுகுழு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது விதிவிலக்கான துணிச்சலுடனும் நேர்மையுடனும் , மிகவும் விரிவான உலகளாவிய சட்ட அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்தமைக்காகவும் , போர்க்குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்,மற்றும் இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் […]

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக பரிசுக்கு அறிவித்துள்ளது.
நவநீதம் பிள்ளை ஒரு தமிழ் வழிதோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசுகுழு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது

விதிவிலக்கான துணிச்சலுடனும் நேர்மையுடனும் , மிகவும் விரிவான உலகளாவிய சட்ட அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்தமைக்காகவும் , போர்க்குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்,மற்றும் இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக முக்கிய பங்காற்றியமைக்காக நவநீதம் பிள்ளைக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

நிறவெறி ஆட்சிக்கு எதிராக உறுதியுடன் நின்ற நெல்சன் மண்டேலா உட்பட பல தலைவர்களுக்காக வழக்காடியது முதல் நமது காலத்தின் முக்கிய நீதிமன்றங்களில் பணியாற்றியது வரை அவரது பணிகளில் ஒரேநேர்கோடு புலப்படுகின்றது.

சர்வதே சட்ட அமைப்பு கடுமையான அழுத்தத்திற்கும் அதன் அமைப்புகள் தொடர்ச்சியாக தாக்குதலிற்கும் உள்ளாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

சட்டநடவடிக்கைகள் மூலம் யுததத்தையும் வன்முறைகளையும் நிறுத்தலாம் என்பதை நவநீதம் பிள்ளை நிரூபித்துள்ளார்.

அவரது சுயாதிபத்தியம் நிபுணத்துவம் தளராத உறுதி ஆகியவை சர்வதேச அளவில் எங்கள் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் நேசிக்கப்படும் நீதிபதிகளில் ஒருவராக அவரை மாற்றியுள்ளது என நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.