Some Populer Post

  • Home  
  • நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்த கணவன்!
- Sri Lanka

நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்த கணவன்!

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகக் படுகொலை செய்துவிட்டுப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 26 வயதுடைய கணவன், வாகரைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் (24) செவ்வாய்க்கிழமை காலை வாகரை, பால்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பால்சேனை, கோவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய காளிராசா மனோஜா எனும் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜெகநாதன் சுஜீவன் என்பவர் இவரைத் திருமணம் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். கணவர் கடற்றொழிலுக்குச் சென்று வரும் வேளைகளில், […]

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகக் படுகொலை செய்துவிட்டுப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 26 வயதுடைய கணவன், வாகரைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் (24) செவ்வாய்க்கிழமை காலை வாகரை, பால்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பால்சேனை, கோவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய காளிராசா மனோஜா எனும் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜெகநாதன் சுஜீவன் என்பவர் இவரைத் திருமணம் செய்து தனியாக வசித்து வந்துள்ளார்.

கணவர் கடற்றொழிலுக்குச் சென்று வரும் வேளைகளில், மனைவியின் உறவினரான இளைஞன் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிற்கு வரவேண்டாம் எனக் குறித்த இளைஞனைக் கணவர் கண்டித்திருந்த நிலையில், நேற்று காலை தகாத உறவு குறித்து மனைவியிடம் வினவியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மனைவியை படுகொலை செய்த கணவர், பின்னர் 119 அவசர இலக்கத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டுப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற தடவியல் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.