Some Populer Post

  • Home  
  • சிறையில் கைதியுடன் மோதல் – அனோஜனிற்கு முகத்தில் காயங்கள் – விஜித ஹேரத்
- Sri Lanka

சிறையில் கைதியுடன் மோதல் – அனோஜனிற்கு முகத்தில் காயங்கள் – விஜித ஹேரத்

சவுதி அரேபிய சிறையில் அனோஜனிற்கும் மற்றுமொருகைதிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அனோஜனின் முகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது அனோஜன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மாம் சிறைச்சாலைக்கு இலங்கை அதிகாரிகள் இரு முறை சென்று அவரை பார்வையிட்டனர். ஓக்டோபர் ஆறாம் திகதி இலங்கை அதிகாரிகள் சென்றவேளை மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அனோஜனிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது. இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் […]

சவுதி அரேபிய சிறையில் அனோஜனிற்கும் மற்றுமொருகைதிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அனோஜனின் முகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

அனோஜன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மாம் சிறைச்சாலைக்கு இலங்கை அதிகாரிகள் இரு முறை சென்று அவரை பார்வையிட்டனர்.

ஓக்டோபர் ஆறாம் திகதி இலங்கை அதிகாரிகள் சென்றவேளை மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அனோஜனிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.

இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி அனோஜனிற்கும் அவருடன் சிறைக்கூண்டை பகிர்ந்துகொண்ட மற்றுமொரு கைதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்மொழி தகராறை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பினால் அனோஜனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் போது கத்திகளே வேறு எந்த ஆயுதங்களோ பயன்படுத்தப்படவில்லை.மற்றைய கைதியின் கை நகங்களாலேயே காயம் ஏற்பட்டுள்ளது என சிறை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.
அனோஜனின் உயிருக்கு தற்போது எந்த வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு உறுதியளித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அனோஜன் சிறைச்சாலையில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.