Some Populer Post

  • Home  
  • கனடாவில் சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது
- Breaking News - Canada

கனடாவில் சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது

பீல் பிராந்தியத்தில் உள்ள தென் ஆசிய வணிக உரிமையாளர்களை குறிவைத்து செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய வழக்கில் 17 பேரை கைது செய்து, அவர்களுக்கு எதிராக 106 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. “For Brothers” என அழைக்கப்படும் இந்தக் குழு, Brampton, Mississauga, Caledon மற்றும் British Columbia பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட 24 […]

பீல் பிராந்தியத்தில் உள்ள தென் ஆசிய வணிக உரிமையாளர்களை குறிவைத்து செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய வழக்கில் 17 பேரை கைது செய்து, அவர்களுக்கு எதிராக 106 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.

“For Brothers” என அழைக்கப்படும் இந்தக் குழு, Brampton, Mississauga, Caledon மற்றும் British Columbia பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட 24 சம்பவங்களுடன் தொடர்புடையதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையாளர்கள் கூறுகையில், 16 வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 324 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதோடு ஆறு துப்பாக்கிகள், போதைப்பொருட்கள் மற்றும் போலி அடையாள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையில் Ontario Provincial Police (OPP), Canada Border Services Agency (CBSA) மற்றும் Federal Bureau of Investigation (FBI) ஆகியவை இணைந்து செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல கைது நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.