Some Populer Post

  • Home  
  • அனைத்துலக தமிழர் பேரவையினால் கனடாவில் உலக தமிழர் ஆய்வு மாநாடு!
- Breaking News - Canada - Sri Lanka

அனைத்துலக தமிழர் பேரவையினால் கனடாவில் உலக தமிழர் ஆய்வு மாநாடு!

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் உலக தமிழர் ஆய்வு மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அனைத்துலக தமிழர் பேரவை நேற்று (06.05.2026) கனடா மார்க்கம் பிராந்தியத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த மாதம் முக்கியமான மாதம் மெய்சிலிர்க்கும் மாதம் இந்தமாதத்தையும் நாங்கள் நினைவுகூரவேண்டும் அதனை தாண்டி போகமுடியாது. அனைத்துலக தமிழர் பேரவை 2004ம் ஆண்டு […]

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் உலக தமிழர் ஆய்வு மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக தமிழர் பேரவை நேற்று (06.05.2026) கனடா மார்க்கம் பிராந்தியத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த மாதம் முக்கியமான மாதம் மெய்சிலிர்க்கும் மாதம் இந்தமாதத்தையும் நாங்கள் நினைவுகூரவேண்டும் அதனை தாண்டி போகமுடியாது.

அனைத்துலக தமிழர் பேரவை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்ட அமைப்பு ஒரே சிந்தனை உடையவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு.

இது ஒரு புலம்பெயர் அமைப்பு -கனடாவிற்கு மாத்திரம் உரியதல்ல,புலம்பெயர் தமிழர்களை தளமாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு,ஜனநாயக ரீதியில் பயணிக்கின்ற அமைப்பு ஆனால் இடைக்கால நிருவாக சபை இரண்டு வருடகாலத்திற்கு பயணிக்கும் டிசம்பர்  மாதத்துடன் அதன் காலம் முடிவடைகின்றது.

ஏதிர்காலத்தில் உறுப்பினர்களை இணைத்து தனக்கான நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ளும்.
அனைத்துலக தமிழர் பேரவையை நாங்கள் உருவாக்கும்போது எங்களுக்கு இருந்த எண்ணப்பாடுகள்,பலரோடும் எங்களுடன் இணைவாக உள்ள பலரோடும் கலந்து ஆலோசித்து இன்றைய நிலையில தமிழர் தாயகத்தை வலிமையடைச்செய்யவேண்டிய தேவை மிக முக்கியமாக இருக்கின்றது.

2009க்கு பிறகு போரின் வீழ்ச்சிக்கு பிறகு நிறையவே நலிவுற்று இருக்கின்ற தேசத்தை நாங்கள் வலிமையடைச்செய்யவேண்டும் – என்பதுதான் முக்கிய இலக்கு நோக்கம்.

அந்த அடிப்படையில் நாங்கள் வடக்குகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்தும் அதேவேளை சர்வதேச அளவில எங்களை பலப்படுத்துவதற்கு ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும்.

வடக்குகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துகின்ற விடயங்களை அவதானிக்கின்ற அதேநேரத்தில் ,சர்வதேச அளவில் ஐக்கியமாக இருப்பதற்கு தமிழ் மொழி கலை கலாசாரம் தான் எங்கள் கையில் உள்ள ஒரு விடயம்.

இன்றைய சூழ்நிலையில் அரசியலை வைத்து நாங்கள் ஒன்றினைவதற்கான வாய்ப்பே இல்லை என்னுடைய கணிப்பு அடுத்த 20 வருடங்களுக்கு அதற்கான வாய்ப்பே இல்லை, நாங்கள் அதனை இழந்திட்டம் ஆனால் முயற்சிப்பம், இழந்ததற்காக அதனை விடவேண்டிய தேவையில்லை முயற்சி செய்வோம்.

இந்த அமைப்பு எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் இறங்காது ஏற்கனவே பலர் செய்கின்றார்கள் அவர்கள் செய்யட்டும்.
சரியான அரசியலுக்கு நாங்கள் வலிமையை வழங்குவோம் ஆனால் எங்கள் கவனம் அபிவிருத்தி தொடர்பானது.அது எல்லாவகையான அபிவிருத்தியும் பொருளாதார அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி எல்லா அபிவிருத்தியும் பொருளாதார அபிவிருத்தியுடன் பின்னிப்பிணைந்தது.

அதேவேளை சர்வதேச அளவில் நாங்கள் ஒன்றிணைவது மிக முக்கியம் அந்த அடிப்படையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாங்கள் ஒருங்கிணைந்த வடக்குகிழக்கின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒரு ஆய்வு மாநாட்டினை நடத்தியிருந்தோம்.

எந்த விடயத்தை எடுத்தாலும் ஆய்வுகள் தரவுகள் ஊடாக முன்னெடுக்கின்றோம் இந்த ஆய்வுகள் எங்கள் அமைப்பிற்கானது மாத்திரம் அல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஆய்வுகள் வடக்குகிழக்கு அபிவிருத்திக்கு உதவியாக அமையும் என்ற அடிப்படையிலேயே இந்த மாநாட்டை நாங்கள் நடத்தினோம்.
இந்த வருடம் எங்கள் இரண்டாவது வருடம் ஒக்டோபரில் நாங்கள் ஏதாவது ஒரு மாநாடு செய்யவேண்டும் என பலருடன் கலந்துரையாடி நாங்கள் எடுத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் போன வருடம் நாங்கள் கடந்த வருடம் வடக்குகிழக்கின் மேம்பாட்டிற்காக செய்தனாங்கள் இந்த முறை உலகத்தமிழர் ஒருங்கிணையும் நிகழ்வாக ஒன்றை செய்யவேண்டும் அதற்குள்ள ஒரேயொரு விடயம் தமிழ் தமிழ்மொழி தமிழர்.

அந்த அடிப்படையில் ஒக்டோபர் மாதம் 15 முதல் 18 திகதி வரை உலகதமிழர் ஆய்வு மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.