Some Populer Post

  • Home  
  • இணையத்தளம் மூலம் உடனடி கடன் நிறுவனங்களின் அதிக வட்டி சுரண்டல்?
- Sri Lanka

இணையத்தளம் மூலம் உடனடி கடன் நிறுவனங்களின் அதிக வட்டி சுரண்டல்?

இணையத்தளம் மூலம் உடனடி கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், நிறுவனங்களால் அதிக வட்டி அறவிடப்படுவது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசி செயலிகள் மூலம் இணையத்தளம் வாயிலாக உடனடி கடன்களை வழங்கி, அவற்றை மீளப்பெறும்போது அதிக வட்டி வீதங்களை அறவிட்டு வாடிக்கையாளர்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கடன் […]

இணையத்தளம் மூலம் உடனடி கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், நிறுவனங்களால் அதிக வட்டி அறவிடப்படுவது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசி செயலிகள் மூலம் இணையத்தளம் வாயிலாக உடனடி கடன்களை வழங்கி, அவற்றை மீளப்பெறும்போது அதிக வட்டி வீதங்களை அறவிட்டு வாடிக்கையாளர்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கடன் பெறுபவர்கள் குறித்த நிறுவனங்களின் நிபந்தனைகள் தொடர்பாக முறையான புரிதலன்றி கடன்களைப் பெறுவதனாலேயே இத்தகைய சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த செயலிகளின் நிபந்தனைகளில், கடன் தொகையை மீள அறவிடும் நடைமுறைகள் மற்றும் இதன்மூலம் ஏற்படும் அனைத்து அபாயங்களையும் கடன் பெறுபவரே முழுமையாக ஏற்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்கள் நிபந்தனைகளை சரியாக வாசித்து விளங்கிக்கொள்ளாமல் இச்செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கடன்களைப் பெற்று வருகின்றனர்.

எனவே, இணையத்தளம் ஊடாக கடன்களைப் பெறும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும், தெளிவான புரிதலுடனும் செயற்படுவதன் மூலம் ஏற்பாடும் அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணையத்தளம் வாயிலாக கடன் வசதிகளைப் பெற விரும்பும் நபர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிபந்தனைகளைச் சரியாகப் புரிந்துகொண்ட பின்னரே கடன்களைப் பெற வேண்டும்.

இதன் மூலம் நிகழக்கூடிய நிதியிழப்புகள் மற்றும் அசெளகரியங்களைத் தவிர்க்க முடியும் என்பதால், பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.