Some Populer Post

  • Home  
  • அந்தமான் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு!
- Sri Lanka

அந்தமான் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் வளிமண்டலத்தில் கீழ்மட்ட காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் நவம்பர் 30ஆம் திகதியளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் வளிமண்டலத்தில் கீழ்மட்ட காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (26) பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன் தாக்கத்தினால் நவம்பர் 30ஆம் திகதியளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதியளவில் இந்தக் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறுவதற்கான குறைந்த சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தரவுகளின் அடிப்படையில், அடுத்த 168 மணித்தியாலங்களுக்குள் இது காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

எனவே, இந்த நிலைமை தொடர்பில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.