Some Populer Post

  • Home  
  • தமிழரின் மனித உரிமைகளை நிலைநிறுத்த கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும்: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி கனேடியப் பிரதமரின் அறிக்கை!
- Breaking News - Canada - Mullivaikkal News

தமிழரின் மனித உரிமைகளை நிலைநிறுத்த கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும்: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி கனேடியப் பிரதமரின் அறிக்கை!

கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி சார்பாக 2022-ஆம் ஆண்டில் ஆனந்தசங்கரி அவர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்த பிரதமர் மார்க் கார்னியின் உரையைப் பகிர்கின்றோம். கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடன் இணைந்து நாம் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கின்றோம். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப்போர் ஆயிரக்கணக்கான பொது மக்களின் உயிரைப் பறித்தது. நாம் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி […]

கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி சார்பாக 2022-ஆம் ஆண்டில் ஆனந்தசங்கரி அவர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்த பிரதமர் மார்க் கார்னியின் உரையைப் பகிர்கின்றோம்.

கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடன் இணைந்து நாம் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கின்றோம்.

கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப்போர் ஆயிரக்கணக்கான பொது மக்களின் உயிரைப் பறித்தது. நாம் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி அளவிடற்கரிய துன்பமடைந்த தப்பிப் பிழைத்தோருக்கும் குடும்பத்தினருக்கும் சமூகங்களுக்கும் துணையாயிருப்போம்.

உலகிலுள்ள மிகப்பெரும் புலம்பெயர் தமிழ்ச்சமூகங்களில் ஒன்று கனடாவிலுள்ளது. வன்முறை, துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து தப்புவதற்குப் புகலிடம் நாடிவந்த பலரும் இதில் அடங்குகின்றார்கள் 2022 ஆம் ஆண்டில் கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப் படுகொலையென அங்கீகரித்தமை துயர்படிந்த வரலாற்றை ஏற்றுக்கொள்வதன் ஒரு முக்கிய படியைப் பிரதிபலிக்கின்றது.

பொறுப்புக் கூறலை முன்னகர்த்தவும் மனித உரிமைகளை நிலைநிறுத்;தவும் இலங்கைத் தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதியை ஊக்குவிக்கவும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

மனித கௌவரம், நீதி ஆகியவற்றுக்கும் இத்தகைய பாரதூரமான மனித உரிமை மீறல்கள் புறக்கணிக்கப்படாமலும் மறக்கப்படாமலும் இருப்பதற்குமான எமது உறுதிப்பாட்டை நாம் மீள உறுதிசெய்கின்றோம் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.