Some Populer Post

  • Home  
  • இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!
- Sri Lanka

இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தம்மை அங்கிருந்து மீட்பதற்கு உதவுமாறு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணம், மேடன் (Medan) பகுதியில் 75 குடும்பங்கள் மற்றும் 38 தனிநபர்கள் என மொத்தமாக 345 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் 18 வயதுக்கு […]

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தம்மை அங்கிருந்து மீட்பதற்கு உதவுமாறு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணம், மேடன் (Medan) பகுதியில் 75 குடும்பங்கள் மற்றும் 38 தனிநபர்கள் என மொத்தமாக 345 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 123 பேரும், பெண்கள் 99 பேரும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 123 பேரும் அடங்குவர்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளில் அகதிகளாகவே 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தம்முடன் வந்த ஏனைய நாட்டு அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிரகத்தின் (UNHCR) ஊடாக மூன்றாம் நாடுகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதிலும், 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை அகதிகளுக்கு எவ்வித மீள்குடியேற்ற வாய்ப்புகளும் வழங்கப்படாமல் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த நவம்பர் 19ஆம் திகதி இலங்கை அகதிகளைச் சந்தித்த  ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிரகத்தின் அதிகாரிகள், இனி மீள்குடியேற்றத்திற்கான வேறு வழிகள் எதுவும் இல்லை எனவும், விரும்பும் வரை இந்தோனேசியாவில் தங்கியிருக்கலாம் அல்லது தனிப்பட்ட நிதியுதவி மூலம் மூன்றாம் நாட்டிற்குச் செல்ல முயற்சிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் எழுத்துப்பூர்வமான விளக்கத்தைக் கோரியபோதும் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமக்கான நிரந்தரத் தீர்வை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் குறித்த மக்கள், கடந்த வெள்ளிக்கிழமை (20) போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வடக்கு சுமத்ரா மாகாண ஆளுநர் முகமது பாபி அஃபிஃப் நசுஷனிடம் (Muhammad Bobby Afif Nasution) மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

 

இந்தோனேசிய அரசாங்கத்தின் மனிதாபிமான ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர்கள், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அகதிகள் உயர்ஸ்உடன் பேச்சுவார்த்தை நடத்தி, தாம் மூன்றாம் நாடுகளுக்குச் செல்வதற்கான சட்டப்பூர்வ வழிகள் குறித்துத் தெளிவுபடுத்தவும், நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் உதவுமாறு அந்த மகஜரில் கோரியுள்ளனர்.

அத்துடன், தமிழ் அரசியல் தலைவர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.