Some Populer Post

  • Home  
  • இடைக்காலக் கொடுப்பனவு தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க
- Sri Lanka

இடைக்காலக் கொடுப்பனவு தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி நேற்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்தவொரு சங்கத்திற்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். எவ்வாறாயினும், இந்தப் போராட்டங்கள் எந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அரச சேவை வரலாற்றில் மிக […]

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி நேற்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்தவொரு சங்கத்திற்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், இந்தப் போராட்டங்கள் எந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அரச சேவை வரலாற்றில் மிக அதிகளவான அடிப்படைச் சம்பள உயர்வு இவ்வாறானதொரு காலப்பகுதியிலேயே இந்த மூன்று வருடங்களில் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் போராட்டங்களை ஒழுங்கமைப்பது, கறுப்பு ஆடை அணிவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் அநியாயமானது என அவர் தெரிவித்தார்.

மோசடி மற்றும் ஊழல்களால் இருண்ட யுகத்தில் இருந்த நாட்டை, தற்போது உலகிற்கு முன்னால் இலங்கையின் நற்பெயரை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த ஜயசிங்க கூறினார்.

இவ்வாறானதொரு அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தார்மீக உரிமை உள்ளதா எனப் பிரதி அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

ஆட்சியாளர்களின் வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளைக் குறைத்துக்கொண்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழிற்சங்கத் தலைவர்கள் தோல்வியடைந்த அரசியல் கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிவதாகவும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.