Some Populer Post

  • Home  
  • ஊழல் குற்றச்சாட்டு; நாங்கள் நிரபராதிகள் யோஷித ராஜபக்ச, வசந்த கரன்னாகொட
- Sri Lanka

ஊழல் குற்றச்சாட்டு; நாங்கள் நிரபராதிகள் யோஷித ராஜபக்ச, வசந்த கரன்னாகொட

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் இலங்கைக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் தம்மை நிரபராதிகள் என திங்கட்கிழமை 930 அன்று தெரிவித்தனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. திறந்த மன்றில் இரு பிரதிவாதிகளுக்கு […]

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் இலங்கைக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் தம்மை நிரபராதிகள் என திங்கட்கிழமை 930 அன்று தெரிவித்தனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. திறந்த மன்றில் இரு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட நிலையில், இருவரும் தம்மைக் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்தனர்.

இந்த நிலைப்பாடுகளைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமானதுடன், மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006ஆம் ஆண்டில், உரிய தகுதிகள் இல்லாத போதிலும், பிரித்தானியாவின் பிரிட்டானியா ரோயல் கடற்படைக் கல்லூரியில் (Britannia Royal Naval College) கற்கை நெறி ஒன்றுக்காக யோஷித ராஜபக்ச அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததன் மூலம் கரன்னாகொட ஊழல் குற்றத்தை இழைத்துள்ளதாகவும், அக்குற்றத்திற்கு யோஷித ராஜபக்ச உடந்தையாக இருந்து உதவி ஊக்குவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.