Some Populer Post

  • Home  
  • தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரி 17 முதல் 23 வரை
- Sri Lanka

தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரி 17 முதல் 23 வரை

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாரணர்கள் 12,000 பேருக்கு மேல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய சாரணர் ஜம்போரிக்கு அனுசரணை வழங்கும் அரச […]

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாரணர்கள் 12,000 பேருக்கு மேல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய சாரணர் ஜம்போரிக்கு அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சாரணர் ஜம்போரியினை வெற்றிகரமாக நடத்துவதற்காக அனுசரணை வழங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் நிதி ரீதியிலான அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை இதற்காக வழங்கும் பங்களிப்புத் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான சந்தர்ப்பமான சாரணர் ஜம்போரியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளிப்பது மிகவும் அவசியமானது என்றும், இதற்காக அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்குவதற்கு இணையாக தனியார் துறையின் பங்களிப்பும் அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக் காட்டினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.