Some Populer Post

  • Home  
  • அதிரடியாக களமிறங்கிய புலனாய்வாளர்கள்!
- Sri Lanka

அதிரடியாக களமிறங்கிய புலனாய்வாளர்கள்!

2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சிக்குக் கடன் சுமை மற்றும் பொருளாதார தவறான நிர்வாகம் மட்டும் காரணமல்ல, ஊழல் மற்றும் நேர்மையின்மையுமே பிரதான காரணங்களாக அமைந்தன என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சட்டத் திணைக்களத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் போது நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது அவர், […]

2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சிக்குக் கடன் சுமை மற்றும் பொருளாதார தவறான நிர்வாகம் மட்டும் காரணமல்ல, ஊழல் மற்றும் நேர்மையின்மையுமே பிரதான காரணங்களாக அமைந்தன என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வோஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சட்டத் திணைக்களத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் போது நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர், 1960களில் சிங்கப்பூருடன் ஒப்பிடப்பட்ட இலங்கை, 2022இல் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துத் திவாலானது.

 

பொருளாதார வீழ்ச்சி
இதனையடுத்தே, ஆசியாவிலேயே முதன்முறையாக ஆட்சிமுறை மற்றும் ஊழல் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ‘ஆட்சிமுறை கண்டறிதல் மதிப்பீட்டை’ (Governance Diagnostic Assessment) இலங்கை கோரியது.

 

இந்த மதிப்பீட்டின் வழிகாட்டுதல்களுக்கமைய, இலங்கையில் 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, சர்வதேச தரத்திற்கு இணையான நவீன சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

புதிய சட்டத்தின் கீழ், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தங்களது சொத்து மற்றும் பொறுப்புக்களை டிஜிட்டல் முறையில் பிரகடனம் செய்யும் மின்னணு அமைப்பு 2026இல் தொடங்கப்பட்டு, இதுவரை 80,000க்கும் மேற்பட்ட பிரகடனங்கள் சமர்ப்பிக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

2022 மக்கள் போராட்டங்கள்..
அத்துடன், பணமோசடி தொடர்பான குற்றங்களை விசாரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கு இணையான அதிகாரமும் சிஐஏபிஓசி ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் 12 புதிய பிரிவுகளும் நிறுவப்பட்டுள்ளன.

 

2022 மக்கள் போராட்டங்களின் மூலம் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கும், களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் மக்கள் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிறுவனங்களுடன் இணைந்து சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் ஊழலைக் குறைப்பதற்குத் தடுப்பு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும், பாடசாலை மட்டத்திலிருந்தே நேர்மைப் பண்புகளை வளர்ப்பதற்கான 2025-2029 தேசிய ஊழல் எதிர்ப்புச் செயற்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.