Some Populer Post

  • Home  
  • அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் – பிமல்
- Sri Lanka

அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் – பிமல்

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. […]

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது.

நாங்கள் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோம், இதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை.

எனினும், இவ்வாறான விடயங்களைக் கையாளும் போது குறிப்பிட்ட இராஜதந்திர நடைமுறைகளின்படியே செய்ய வேண்டும்.

ஏனெனில் அந்தந்த நாடுகளுக்கென சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன.

இருப்பினும், அவரை மீட்டெடுப்பதற்கு நாங்கள் அதிகபட்சமாக தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.