Some Populer Post

  • Home  
  • கிளிநொச்சியில் அடுத்தடுத்து வாள் வெட்டு!
- Sri Lanka

கிளிநொச்சியில் அடுத்தடுத்து வாள் வெட்டு!

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்விடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்த்தகரங்களால் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள் வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை […]

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்விடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்த்தகரங்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள் வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த வாரங்களில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.